காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையானது தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ந்தேதி மீண்டும் அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் என்பவர் இன்று காலையில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், திடீரென அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவரை ஆம்புலன்சில் வைத்து லூதியானா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் பாத யாத்திரையில் பங்கேற்ற எம்.பி. சந்தோக் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

0 Comments