மணமேல்குடி அருகே வடக்கு புதுக்குடி பசுபதி என்பவரது வலையில் சிக்கிய அரிய வகை ஆமையை மீட்டு கடலில் விட்ட வனத்துறையினர்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்குபுதுக்குடி மீனவ கிராமத்திலிருந்து மீனவர்கள்  கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.அப்போது பசுபதி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது வலையில் அரியவகை ஆமை சிக்கியது. உடனடியாக மீனவர் பசுபதி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வனவர் அன்புமணி, சோனமுத்து, பன்னீர்,மற்றும் வேட்டை தடுப்பு காவலர் முத்துராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அரியவகை ஆமையை மீட்டு நடுக்கடலில் விட்டனர். குளிர்காலங்களில் அரிய வகை ஆமைகள் கடற்கரை பகுதியில் முட்டையிடுவதற்காக அதிகளவில் வரத் தொடங்கியுள்ளது.

Post a Comment

0 Comments