புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளச்செட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காளியம்மாள் தம்பதியினர்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இராமன் கூலித் தொழிலான வீட்டில் பயன்படுத்தப்படும் பனங்கூடை, பனைவிசிறி, பின்னுவதர்க்காக அந்த பகுதியில் உள்ள வயல் வெளியில் இருக்கும் பனை மரத்தில் ஏரி பனைஓலை வெட்டியுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்தின் மேலே சென்ற ஹச்டி லைன் கொண்ட மின்சார கம்பி உரசியதில் கை கால் எரிந்த நிலையில் பனை மரத்திலேயே ராமன் உயிரிழந்துள்ளார்.அப்போது வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் பனைமரம் எரிவதை பார்த்துள்ளனர். அப்போது ராமன் பனைமரத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
உடனடியாக ஆவுடையார் கோவில் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் கயறு மற்றும் ஏணி மூலம் கீழே இறக்கி உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது.பனங்கூடை,பனைவிசிறி, சொலகு வியாபரத்திற்காக பனைஓலை வெட்ட சென்ற ராமன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments