அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், அறந்தாங்கி சோனா டவர் ரஞ்சிதம் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.ஜி. ராஜா, பொருளாளர் சு.விஸ்வமூர்த்தி, துணைச்செயலாளர் சி.காசிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெ.ரெங்கநாதன், செந்தில்குமார் பல்லவராயர், முத்தழகு, கத்தார் பாலு, எம்.ஜி. சேகர், பழனிராஜன்,முத்து.சிவகிருபாகரன், வீரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அறந்தாங்கி நகராட்சி சார்பில் பட்டுக்கோட்டை சாலையில் கடந்த 2017 ஆண்டு அமைக்கப்பெற்ற ஜீவனாலயம் எரிவாயு தகன மேடையை , கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து பராமரித்து வருகின்றது.இங்கு நகராட்சி அனுமதியோடு தியான மண்டபம் ஒன்றை கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை அமைத்து, உருவாக்கி உள்ளது. இதன் திறப்பு விழா குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பெற்றது.இவ்விழாவை எதிர்வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்துவது என்றும், அதற்காக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்றத்தலைவர் , நகராட்சி ஆணையர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன.
கூட்டத்தில் பார்த்திபராஜா, தனலட்சுமி சரவணன், ஜெயச்சந்திரன், மாணிக்கம், பரக்கத்துல்லா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் பேசினர். முன்னதாக செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.வினோத்குமார் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக செயற்குழு உறுப்பினர் ஜெ.ரஜினி நன்றி கூறினார்.


0 Comments