புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் குடிதண்ணீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் சுமதிமுத்துவிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ஆழ்துளாய் கிணறு அமைக்கும் பணியை அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குடிதண்ணீர் பிரச்சனை சரிசெய்ய முயற்சி எடுத்த அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் கவுன்சிலர் சுமதிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோருக்கு அப்பகுதி கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 Comments