விருதுநகர் ஆத்து பாலம் அருகில் சிஐடியு கட்சி சார்பாக, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மத்திய மாநில அரசு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆன்லைன் அபராதம் என்று ஆயிரக்கணக்கில் கொள்ளையடிப்பதை தவிர்க்க வேண்டும், ஓவர்லோடு என்று அநியாய அபாரதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்,பெட்ரோல். டீசல் கேஸ் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் .
காவல்துறை ,ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்று வரும் லஞ்சம், ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும், ஆட்டோ, டாக்ஸி கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்,கார்ப்பரேட்களுக்கு ஆதரவான மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், எப்சி வழங்கும் உரிமையை தனியாருக்கு வழங்கக் கூடாது, நல வாரியத்தை குளறுபடியின்றி முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 ஆம் சகோரிக்கைகளை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தின்போது போக்குவரத்து துறை மண்டல பொதுச்செயலாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


0 Comments