தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தல் சாதனை.கர்நாடக மாநிலம் பெக்காமின் நடைபெற்ற தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பனிரெண்டு அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. பரபரப்பாக நடைபெற்று முடிந்த இப்போட்டியில் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேசன் ஆறு மாநிலத் தலைவர் சீனிவாசன்,மாநில தலைவர் சரவணன்,மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையிலான தமிழ்நாடு அணியினர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்ததுள்ளனர்.மேலும் புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அருகே உள்ள தச்சம்பட்டி கிராமத்தை பூர்வமாக கொண்ட திருச்சி எஸ்ஆர்வி பள்ளிக்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி பவித்ரா சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றார். தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழ்நாடு அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பவித்ராவின் வெற்றியை புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அருகே உள்ள தச்சம்பட்டி கிராம மக்கள் அப்பகுதி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: இரா.பாஸ்கர்
No comments:
Post a Comment