உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் யானையை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு செய்தார்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார்.   56 வயதுள்ள இந்த யானையை கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வருவது வழக்கமாகும்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ராமர் கோவிலுக்கு இராஜபாளையத்தில் இருந்து லாரியில் கொண்டு வந்து உள்ளனர். அப்போது விருதுநகருக்கு வந்த  யானை தீடீரென்று லாரியிலேயே மயங்கி விழுந்து உள்ளது. 

இதனை அடுத்து அதிர்ச்சியான யானை பாகங்கள் வனத்துறைக்கும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் கொடுத்து உள்ளனர். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினரும் கால்நடை மருத்துவர் குழுவினரும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

அப்போது மருத்துவர்கள் இந்த யானைக்கு 6 மாத காலம் கண்டிப்பாக ஒய்வு அளிக்க வேண்டும் என கூறி உள்ளனர். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் யானையை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றது தான் தற்போது யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். 

மருத்துவ குழுவினர் தெரிவித்ததை முன்னிட்டு இன்றுவரை கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து சிகிச்சை அளித்து பாராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வரும் 56 வயதுடைய லலிதா என்ற யானையை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் சென்று யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்   முறையை  கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 இதனைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்பு இணை இயக்குநர் கோவில் ராஜ், மதுரை விலங்கு நல சிறப்பு மருத்துவர் கலைவாணன், சாத்தூர் வருவாய் அலுவலர் அனிதா, மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோரும் விருதுநகரில் பராமரிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் லலிதா என்ற யானையை ஆய்வு செய்தனர்.

Post a Comment

0 Comments