தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள மறைவையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம்தெற்கு அக்ரஹாரத்தில் உள்ளவீட்டில் ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரரும்அதிமுக நகர் மன்ற குழு தலைவருமான ஓ.சண்முகசுந்தரம் ஆகியோரை சந்தித்த, பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.உடன், தேனி மாவட்ட பாஜக தலைவர் பிசி பாண்டியன், மாவட்ட ஊராட்சிகள் குழு துணை தலைவர் ராஜபாண்டியன்,பொதுச் செயலாளர் பாலு,நகரத் தலைவர் முத்துப்பாண்டி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 Comments