டாணாபுதூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து அம்மை அழைத்து வந்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டி  டாணாபுதூரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நடந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மார்ச் 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில்  காலை பவானிஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்துக்குளி அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம் நம்பியூர் சாலை,கோவை சாலை வழியாக சென்றது. திரளான பெண்கள் வேப்பிலையுடன் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். தீர்த்தக்குட ஊர்வலம் கோவிலை சென்றடைந்தும் தீர்த்தக்குடத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.வரும் மார்ச் 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments