வளரும் தமிழகம் கட்சி சார்பில் கட்சிக் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பில் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் அதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் நகரம் அண்ணா சிலை அருகிலும் வளரும் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் பாலை பட்டாபிராமன் கட்சிக்கொடி ஏற்றினார்.

இந்த நிகழ்வில் மாநில பொருளாளர் ஆரோக்கிய செல்வம் மாநில இளைஞரணி செயலாளர் கிட்டு ராஜசேகரன் மண்டல செயலாளர் பாவா மண்டல இளைஞரணி செயலாளர் பூவை ராஜ்குமார் மாவட்ட செயலாளர் சந்திரகுமார் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் சுமார் 100கும் மேற்பட்ட வளரும் தமிழகம் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments