ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் அனைத்து வியாபாரிகள், வணிகர்கள், சிறு வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் செயல்படும் வணிகர் சங்கம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை ஒருங்கிணைத்து அனைத்து வியாபாரிகள் சங்கமாக செயல்பட ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில் அனைத்து வியாபாரிகள் சங்க கௌரவ தலைவராக பழனிச்சாமி, தலைவராக சக்திவேல், செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக சுப்பிரமணியம், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments