கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்று வர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பேருந்து நிலையம் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணிகளை உள்ளே சென்று இறக்கி விடாமல் வெளியிலேயே இறக்கி விட்டு செல்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவகாரத்தில் தலையிட்டு அரசு மற்றும் ஆமினி பேருந்துகள் பயணிகளை கூடுதல் பேருந்து நிலையத்திற்கு உள்ளே இறக்கி விட வேண்டும் என வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினார் மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்  பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர்.

Post a Comment

0 Comments