அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் Global Grant திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் திறப்புவிழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை வகித்து தலைவர் Dr.பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்விற்கு தலைமை விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுநர் I.ஜெரால்டு கலந்துகொண்டு 23.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தினை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார்.
இரண்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இவ்வளாகத்தில் 30 கழிவறைவகள் 10 கை கழுவுமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறந்தாங்கி ரோட்டரி கிளப்புடன் இணைந்து திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப், மலேசியாவில் உள்ள ரோட்டரி மாவட்டம் 3300த்தின் பண்டார் சுங்கை பட்டானி ரோட்டரி கிளப் ரோட்டரி மாவட்டம் 3000, ரோட்டரி அறக்கட்டளை நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிகழ்சி சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் A.L.சொக்கலிங்கம், S கோபால் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஆளுநர் கண்ணன்,வருங்கால ஆளுநர் R.ஆனந்தஜோதி, வருங்கால ஆளுநர் நியமனம் ராஜா கோவிந்தசாமி, வருங்கால ஆளுநர் தேர்வு நியமனம் J.கார்த்திக் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் A.ராஜாராம், மேலாண்மைக் குழு, முன்னாள் மாவட்டச் செயலாளர் கான் அப்துல் கபார்கான், திருச்சிராப்பள்ளி போர்ட் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் நாகராஜன், பாஸ்கரன், திட்ட ஆலோசகர் மதுரை இன்னோவேட்டர்ஸ் கிளப் குமரப்பன், மண்டலச் செயலாளர் பீர்சேக், மேலாண்மைக் குழு தலைவி சுகாசினி விஜய் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இத்திட்டத்திற்கு நன்கொடையளித்த அறந்தாங்கி ரோட்டரி கிளப் சுரேஷ்குமார், விஜயா துரைராஜ், வீரமணிகண்டன், ஆறுமுகம், ராமன்பரத்வாஜ், பிரேம்குமார், ஜாஹிர் ஹுசேன், மற்றும் கட்டுமானம் செய்த பொறியாளர் கர்ணன் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப் பட்டனர்.
முன்னதாக மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமையாசிரியை கார்த்திகா மற்றும் மாணவிகள் ஏற்புரை வழங்கினர். நிறைவாக துணை ஆளுநர் சுரேஷ்குமார் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ரோட்டரி கிளப்பின் மாவட்ட, சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவியர், ஆசிரியர்கள், மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments