தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 26, 2023

தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

 


மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் வருகிற 6-ந் தேதி வரை நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களில் வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரெயில்கள்மதுரை ரெயில் நிலையம் வராமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. மதுரை-சண்டிகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12687) இன்றூு (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 4-ந் தேதிகளில் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16106) வருகிற 28-ந் தேதி வரையிலும், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12662) வருகிற 3-ந் தேதி வரை மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது. நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12632) வருகிற 28-ந் தேதி முதல் வருகிற 3-ந் தேதி வரை, கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16824) மற்றும் கொல்லம்-சென்னை (தென்காசி வழி) எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16102) ஆகியவை வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்று அங்கிருந்து சென்னை செல்கிறது. இந்த ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் மதுரை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here