நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலைக்கான நிதியினை குறைத்து விவசாய தொழிலாளர்கள் வாழ்வுரிமையை சீரழிக்கும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாக குழு உருப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர்கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். இதில் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களை பாதுகாத்திட உடனடியாக அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை தொடங்கிட வேண்டும் மத்திய அரசு பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு கடந்த ஆண்டை விட பாதியாக நிதி ஒதுக்கீடு குறைத்ததை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும்.100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும் விவசாய தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை 6 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் பட்டிலியின மக்களுக்கு வழங்குவது போல் 10 லட்ச ரூபாய் முழு மானியத்துடன் தொழிற்கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காந்தி ,மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர்கள் ஹாஜாஅலாவுதீன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பர்ணபாஸ், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments