ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேரூராட்சி 9 - வது வார்டு பகுதியில் நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர், பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார் தலைமையில் நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் இரா. நடராஜன் , 9-வது வார்டு உறுப்பினர் கலையரசி மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நமக்கு நாமே திட்டம் 2021 - 2022 - ன் கீழ்,பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான ஓம் சக்தி கோயில் வீதியில் கான்கிரீட் தளம் மற்றும் வடிகால் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்வின் போது முன்னாள் ஒன்றிய கழக பொருளாளர் என்.சி. சண்முகம் , 6 - வது வார்டு செயலாளர் எஸ். பி. வரதராஜ் , முன்னாள் மாவட்ட பிரதிநிதி எம். மனோகரன் காங்கிரஸ் மருது , கோபி சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அ.பூர்ணசந்திரன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் , உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments