தேனி,மார்ச்.3- தேனி மாவட்டம் பெரியகுளம் ராயல் அரிமா சங்கம் ,ரோட்டரி கிளப் ,மாங்கனி அரிமா சங்கம் ,வாசகர்கள் வட்டம் ஆகியோர் இணைந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட நூலக ஆணைக் குழு அறிவுறுத்தலின் பேரில் பெரியகுளத்தில் தேனி மாவட்டம் முதல் புத்தகத் திருவிழா 2023 விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் தென்கரை நூலகத்தில் துவங்கி கடைவீதி,காந்தி சிலை, தண்டுபாளையம்,அம்பேத்கர் சிலை வழியாக மீண்டும் தென்கரை நூலகம் சென்றடைந்துள்ளனர். இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி தென்கரை நூலகம் முன்பு பெரியகுளம் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார் .இதில் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ,பாரதியார் நடுநிலைப்பள்ளி , டிரயம்ப் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .பெரியகுளம் நகராட்சி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர். வழக்கறிஞர் மணிகார்த்திக் ,அன்புக்கரசன் ,பொறியாளர் ராமநாதன், நல்லாசிரியர் சிவபாலு, பொறியாளர் ஜெகன் மற்றும் பெரியகுளம் தாலுகா கிளைநூலகம் சார்ந்த அனைத்துநூலகர்களும் கலந்து கொண்டனர்.தேனி மாவட்டம் முதல் புத்தகத் திருவிழா 2023 விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நல்நூலகர் சவடமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

0 Comments