மார்ச் 23 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் எங்கே எனது வேலை? எனக்கேட்டு இளைஞர் எழுச்சி பரப்புரை பயணம் நடத்தப் போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது,அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டக்குழு கூட்டம் மாவட்டதலைவர் சு.பாலசுப்ரமணியன் தலைமையிலும் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் முன்னிலையிலும் திருவாரூர் சிங்காரவேலர் நினைவரங்கத்தில் நடைபெற்றது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் மற்றும் இளைஞர் பெருமன்ற முன்னாள் மாநில தலைவர் கே.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டினார்கள்.
கூட்டத்தில் இளைஞர்மன்ற மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.சரவணன், எம்.நல்லசுகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.கனேஷ், மாணவர் மன்ற மாவட்ட தலைவர் ஜெ.பாரதசெல்வன், மாவட்ட பொருளாளர் க.கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்று (BNEGA), வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் ரூ 10 ஆயிரம் நிவாரணம் கொடு, ஒன்றிய மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரபபிடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்திடு, வேலை வாய்ப்புகளில் ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் முறையினை ரத்து செய்து, நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைத்திடு, தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியமாக 21 ஆயிரம் கிடைப்பதை உறுதிப்படுத்து, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 45 வயதுக்குள் இறந்து விடுவோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கிடு, தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்று என்பன உள்ளிட்ட கோரிக்கையினை வலிறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் மார்ச் 23 முதல் ஏப்ரல் 2 ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நான்கு முனைகளில் பரப்புரை பயணம் தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி திருச்சியில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது, திருவாரூர் மாவட்டத்தில் 26,27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் பரப்புரை பயணத்தை 500 இருசக்கர வாகனத்தில் வரவேற்று மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும், 4 நகராட்சிகளிலும் மக்கள் கூடும் முக்கிய மையங்களிலும் பிரச்சாரம் செய்வது, மேலும் திருச்சியில் நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டில் 1000 இளைஞர் பங்குகொள்ள செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

0 Comments