மாணவர்களின் பறை இசையுடன் தொடங்கிய நமது ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய உணவு திருவிழா... 300 வகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன...

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பாரத் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தமிழ்நாடு இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் பாரத் கல்லூரி இணைந்து நடத்திய பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று துவங்கியது.மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் 300 வகையான பாரம்பரிய உணவுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

முன்னதாக இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் பறை இசையுடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகமாக பறை இசைத்ததை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.தொடர்ந்து 300 வகையான பாரம்பரிய உணவு வகைகளை மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக பாரம்பரிய அரிசி வகையில் செய்யப்பட்ட உணவு வகைகள் சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்டலி வகைகள்.  தூதுவளை உள்ளிட்ட பல்வேறு மூலிகையில் செய்யப்பட்ட துவையல்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

மேலும் தர்பூசணியில் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன.இதனை அரசு பள்ளி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டு களித்து சென்றனர் மொத்தம் இரண்டு நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் உணவு பாரம்பரியம் குறித்த கருத்தரங்கு மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



Post a Comment

0 Comments