தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது . துணைத் தலைவர் மருதையம்மாள் சாஸ்தா ,வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள் ) ஜெகதீசன்,விஜயமாலா (கிராம ஊராட்சிகள் ) ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாக்கியம் கண்ணன் , சண்முகவள்ளி ,செல்வி அன்னபிரகாஷ் ,ரேவதி அசோக்குமார் ,பாலசுப்பிரமணி ,சரவணன் ,ஈஸ்வரன், வெள்ளைசாமி , தேவர் லிங்கம்மாள், செல்வம் , ஆண்டி, ராசு , பாண்டியம்மாள் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மூலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மத்திய மாநில அரசு திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள திட்ட பணிகளை அங்கீகரிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கிராம் ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தேவையான சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்ததற்கான செலவின பட்டியல் தொகை ரூ.4,97,745 பணத்தை பொது நிதியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு இணைய வழி காண பணபரிவர்த்தனை செய்தது உள்ளிட்ட மொத்தம் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மருதையம்மாள் சாஸ்தா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

0 Comments