கோபியில் 5 பள்ளிகள், 19 அங்கன்வாடி மையங்கள்,600 நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பி்லான நலத்திட்ட உதவிகள் விழா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த 1ம் தேதி முதல் கோபி,பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர்,நம்பியூர், தூ.நா.பாளையம், கவுந்தப்பாடி என அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் அவைத்தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகிய ர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கோபி அருகே முருகன் புதூரில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மொடச்சூர் நகராட்சி ஆரம்ப பள்ளி, மொடச்சூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, வேங்கம்மையார் உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் டிவிகள், சிறுவலூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுவலூர், மல்லநாய்க்கனூர், எஸ்.கவுண்டன்பாளையம், பதிபாளையம், எம்.ஜி.ஆர்.நகர், குப்பாண்டாம்பாளையம், அழகு கவுண்டன் பாளையம், மணியகாரன்புதூரில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கும், கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட கொளப்பலூர், காமராஜ்நகர், கல்லுமடை, அருவங்கொரை,எல்.எம்.காலணி, சாணார்பாளையம், அம்மன்கோயில் பதி, கும்மிகருக்கு, மேட்டுவலுவு, மகாலட்சுமிநகர், வரப்பாளையம் உள்ளிட்ட 19 அங்கன்வாடி மையங்களுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான சேர், உள்ளிட்ட உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அதே போன்று கோபி நகரில் உள்ள மாற்றுத்தறனாளிகள், நலிவடைந்தோருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  500 பேருக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும், 100 சாலையோர வியாபாரிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ராட்சத குடையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி, திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைச்செயலாளர் கீதா நடராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர் வி.பி.சண்முகசுந்தரம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, கோபி நகர செயலாளரும், கோபிச்செட்டிப்பாளையம்  நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோபி நகராட்சி வார்டு உறுப்பினரும், நகர இளைஞரணி அமைப்பாளர்  விஜய் கருப்புசாமி, கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ், துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, கொளப்பலூர் சேர்மன் அன்பரசு ஆறுமுகம், சரண்யா அன்பரசு, லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர் வேலவன், மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திருவேங்கடம், நகர துணைச் செயலாளரும் , கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி வார்டு உறுப்பினர் சரோஜா பிரகாசம், அவைத்தலைவர் மணி, பொருளாளர் சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் அய்யாசாமி, சவுகத் அலி, நகராட்சி துணைத்தலைவர் தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments