விளாத்திகுளத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 மரங்கள் நடும் விழா - சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பங்கேற்பு

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை, பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் இணைந்து மரங்கள் மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ஒருகோடி மரம் நடுவது என தீர்மானிக்கப்பட்டு அதன் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில்,  மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் விளாத்திகுளம்-எட்டையாபுரம் சாலையில் உள்ள சொக்கலிங்கபுரம் முதல் கழுகாசலபுரம் வரை சாலையின் இருபுறம் உள்ள ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் ஆறுமுக நயினார் தலைமை வகித்தார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். தொழிலதிபரும் சமூக ஆர்வலர் ஜெயராமன் கலந்துகொண்டு மரம் நட்டுவைத்து விழாவை தொடங்கிவைத்தார். விழாவில்,விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், பி.டி.ஓக்கள்,தங்கவேல், முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் நடராஜன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments