சத்தியமங்கலத்தில் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா... 581 பேருக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்    முதலாம் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தியாகராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு   பல்வேறு துறைகளில் பயின்று பட்டம் பெற தகுதி பெற்ற 581 இளங்கலை மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே சுய சிந்தனையை வளர்த்துக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் வாழ அறிவுரை வழங்கினார்‌. மேலும் கணினி அறிவியலின் தாக்கத்தால் வளர்ந்து வரும் இவ்வுலகத்தில் செயற்கை நுண்ணறிவு மட்டுமே இனிவரும் காலங்களில் உலகை ஆளப் போகிறது என்ற உன்னதத்தை எடுத்துரைத்தார். முன்னதாக அந்தந்த துறைத் தலைவர்கள் பட்டம் பெற தகுதி பெற்ற மாணவர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி


Post a Comment

0 Comments