ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையையொட்டி திருவாரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.அதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் சுற்று என்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதை கொண்டாடும் விதத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையை கொண்டாடும் விதத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்.திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாயிலில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரான பூண்டி கலைவாணன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து திருவாரூர் நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் திமுக நகர செயலாளர் வாரைப் பிரகாஷ் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments