திருவாரூரில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசம்

திருவாரூர் நகரத்துக்குட்பட்ட பேட்டை என்கின்ற அம்பேத்கர் நகர் பகுதியில் ஜெயபால் மாரிமுத்து என்பவர்கள் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் ஜெயபால் என்பவரின் வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது உடனே வீட்டில் உள்ளவர்கள் வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டனர், அதற்குள் தீ அருகில் உள்ள பாலு மற்றும் கருணாநிதி வீட்டிற்கும் தீ பரவத் தொடங்கியது.

வீடுகள் எரிந்து கொண்டிருப்பதால் வீட்டில் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வாலி போன்ற பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் மேலும் இந்த தீயானது ஜெயபால் வீட்டின் எதிர்ப்புறம் உள்ள மாரிமுத்து ஓட்டு வீட்டிலும் பரவி உள்ளது அவரது வீட்டின் பின்புறம் போட்டிருந்த குடிசையிலும் தீ பற்றியது அதனையும் உடனடியாக அக்கம் பக்கத்தினர் நீரை ஊற்றி அணைத்தனர்.

மேலும் அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே நான்கு வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது மேலும் வீட்டில் உள்ள பீரோ கட்டில் டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது மேலும் சம்பவ இடத்திற்கு நகர போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்குமோ அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நான்கு வீடு தீப்பற்றி எரிந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments