தேவராயன்பட்டியில் அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் நத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்தது தேவராயன்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் 100 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இதில் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கிராமத்தில் உள்ள தெருக்களில் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை.  மேலும் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் கழிவு நீர் தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

குடிநீர் கிணறு திறந்த வெளியில் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி தலைவர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் சரி செய்யப்படும் என்ற உறுதியை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Post a Comment

0 Comments