திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது

 

ஈரோடு மாவட்டம், தூ.நா.பாளையம் ஒன்றிய திமுக சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு  கள்ளிபட்டியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி ,  செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர்  ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் A.G..வெங்கடாசலம்   , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி,  முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கந்தசாமி, ஈரோடு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், திரைப்பட நடிகர் சத்யராஜ், தூ.நா.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன்  , சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும் சத்தி நகர திமுக செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ மற்றும் திமுக மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments