கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாநில மகளிர் ஆனையம் சார்பாக குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் பெண் சிசு கொலை தடுத்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் ஆனைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊத்தங்கரை பீடிஒ அலுவலகம் எதிரே துவங்கிய பேரணி கல்லாவி ரோடு.அரசமரம்.நான்கு முனை சந்திப்பு வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் மாவட்ட சமுக நல அலுவலர் விஜயலட்சுமி. ஜெயந்தி.வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்குமார்.மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments