விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக தமிழ்நாடு முதல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் முத்தையா தலைமையில்,தமிழக அரசு CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலவைத் தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்,தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MRP செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், மற்றும் ஊர் புற நூலகர் உள்ளிட்டோர்க்கு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்,சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் சார்பாக இன்று ஒரு நாள் மாபெரும் உண்ணாவிராத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரத போராட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க தலைவர் குணசேகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் கருப்பையா, உடற்கல்வி ஆசிரியர் சங்கத் தலைவர் பிச்சை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வைரமுத்து, பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் விஜயபாலன் ,உள்ளிட்ட ஏராளமான சங்கத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

0 Comments