லண்டன் பெண்ணை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்ட விருதுநகர் வாலிபர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடம்பன் குளத்தைச் சார்ந்த சங்கர்- விஜயகுமாரின் மகன் கார்த்திக் இவர் பொறியல் படித்துவிட்டு லண்டனில் வேலை செய்து வருகிறார் அங்கு பணி செய்து வரும் இவர் லண்டனைச் சார்ந்த கேட்டியா ஒலி வேரா  என்ற மீனாட்சியை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் இவர்களின்  திருமணத்திற்கு கார்த்திக் குடும்பத்தினர் அனுமதி அளித்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள வலுக்க லொட்டி   பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இந்து முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் லண்டன் மணப்பெண்ணுக்கு  உறவினர்கள் யாரும் இல்லாததால் அவருடன் பணிபுரியும் நைஜீரியாவை சார்ந்த தோழி ஒருவர் பெண் வீட்டார் சார்பாக அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார்.

Post a Comment

0 Comments