நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூச்சொரிதல் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தாய் மூகாம்பிகை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் மேளதாளங்கள் முழங்க திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்ததும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் தாய் மூகாம்பிகையின் திருத்தேரினை படம்பிடித்து இழுத்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை ஆரியநாட்டுத்தெரு தாய்மூகாம்பிகை கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வரும் 7, ம் தேதி நாளை நாகப்பட்டினம் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.




0 Comments