நாகையில் சிலம்பம் , பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு நடைப்பெற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா; வணிக நிறுவனங்களின் பெயர்பலகைகள் தமிழில் அமைக்க வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.
கடந்த 1956 ம் ஆண்டு 12 வது மாதம் 27 ம் தேதி தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்றது. அந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்டவாரமாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா கடந்த 1 ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
அதன் ஒருபகுதியாக இன்று வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைத்திடு வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடைப்பெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது அவுரித்திடலில் தொடங்கி அரசு மருத்துவமனை அண்ணாசாலை, தேரடி கடைத்தெரு, நாலுகால் மண்டபம் வழியாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் வரை சென்றடைந்தது.
பேரணியில் சிலம்பம், பரதநாட்டியம் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள், வணிக நிறுவன உரிமையாளர்கள். தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்புகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியப்படி ஊர்வலமாக சென்றனர்.




0 Comments