தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்த ஆளுநர் ரஞ்சித் குமார் தென்கரை காவல்துறையினர் உதவியுடன் மீட்டு, பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சேர்த்து மறுவாழ்வு கிடைக்க வழிவகை செய்தார். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜு என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிகிச்சைக்குப் பின் அவரை சொந்த ஊரில் உறவினர்களுடன் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர் .மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த நபரை மீட்டு உதவி செய்த ரஞ்சித் குமாருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி தெரிவித்து வருகின்றனர் .

0 Comments