பெரியகுளம் எ.புதுக்கோட்டை விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு

 


தேனி மார்ச் 2, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் எ.புதுக்கோட்டை விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தை தலைவர் பிச்சை திறந்து வைத்தார்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நீர்வளத்துறை, நீர்வளநிலவளதிட்டம்,குக்கலாறு அணைக்கட்டு வாய்க்கால், எ.புதுக்குளம்கண்மாய், மற்றும் கைக்கிளாண்குளம்கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் எ.புதுக்கோட்டை விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர் பிச்சை தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார். உறுப்பினர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் புரவு காவல் தலைவர் அழகர் மற்றும் வீராச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments