திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் கவியரசன் என்பவர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பிப்ரவரி 6 ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திருவாரூரில் உள்ள தெற்கு வீதியில் படுகொலைக்கு காரணமான பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு அடுத்து பிப்ரவரி 9 ஆம் தேதி அதே திருவாரூர் தெற்கு வீதியில் பட்டியல் இன மக்களை பாஜகவில் இருந்து பிரிக்க நினைக்கும் விடுதலை சிறுத்தை கட்சியை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி பங்கேற்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சனம் செய்தார் இந்த நிலையில் திருவாரூர் விடுதலை சிறுத்தை கட்சியினர் கடுமையான விமர்சனம் செய்த தடா பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் தடா பெரியசாமி மீது திருவாரூர் நகர போலீஸார் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், தகாத வார்த்தையால் பேசியது, தாக்குதலுக்கு தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 Comments