தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட  கீழ்க்கண்ட பகுதியிகளில் 1).கொம்பன் கோயில் கிராமத்தில் 500 நபர்களுக்கு  அரிசி சிப்பம்.

 2).சாலப்பாளையம் மேடுகிராமத்தில் 200 நபர்களுக்கு அரிசி சிப்பம், தட்டு , பிரட் பாக்கெட்.

 3).புங்கம்பாடி கிராமத்தில் 200 நபர்களுக்கு அரிசி சிப்பம் ,  எவர் சில்வர் தட்டு, பிரட் பாக்கெட்.

 4).புங்கம்பாடி தொடக்க பள்ளிக்கு

 2 கலர் பிரிண்டர்.

 5).சானார்பாளையத்தில் 300 நபர்களுக்கு  அரிசி சிப்பம்.

 6).பாறை வலசில் 400 நபர்களுக்கு  அரிசி சிப்பம்  போன்ற பொருட்களை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை ஒன்றிய செயலாளர் மணி ( எ ) செங்கோட்டையன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் முன்னாள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் , ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தலைமை செயற்குழு உறுப்பினர் கொமாரசாமி , மாவட்ட பொருளாளர் பி.பழனிசாமி , ஈரோடு ஒன்றிய செயலாளர் துரை சதசிவம் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments