தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் விதொச மாவட்ட செயலாளருமான இரா.சேகர் தலைமை தாங்கினார்.இதில் தோழமை கட்சிகளான தேசிய காங்கிரஸ் கட்சி.திராவிடர் கழகம். இந்திய குடியரசு கட்சி.விடுதலை சிறுத்தைகள் கட்சி.மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்றது. 

இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அரசியல் அமைப்பு சட்டத்தை அத்துமீறியும் சிறுமைபடுத்தியும் செயல் படுத்தி வருவதை ஒட்டுமொத்த மக்களும் கண்டித்து வருகின்றனர்.அரசியல் அமைப்பு அதிகார பொறுப்பில் இருந்து வரும் ஆளுநர் அரசியல் கட்சி RSS BJP சேவகராக செயல்பட்டு வருவது எதிர்மறை நடவடிக்கை ஆகும்.அண்மை காலமாக கம்யுனிஸ்டுகள் மீதும் கார்ல் மார்க்ஸ் மீதும் விஷமத்தனமான கருத்துக்கள் தெரிவித்து தமிழக மக்களை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.ஆளுநரின் நடவடிக்கை எல்லை மீறி சென்று தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பான மதச்சார்பின்மை தகர்த்தி இந்தியாவும் மதச்சார்பின்மை நாடுதான் என பேசி வருகிறார்.ஆளுநரின் நடவடிக்கை எல்லை மீறி சென்று தமிழ்நாட்டின் அமைதி நிலையை சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகிறார்.ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments