சங்கரன்கோவில் அருகே பாமக மகளிர் அணி தலைவி தண்டவாளம் அருகே சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சார்ந்தவர் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில்  பாட்டாளி மக்கள் கட்சியில் தென்காசி மாவட்டம் மகளிர் அணி தலைவியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் சாலையில் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளம்பகுதியில் அருகெ மாரியம்மாள் இறந்த நிலையில் சடலமாக  கிடந்துள்ளார்.

 பின்னர் அவ்  வழியாக ஆடு மாடு மேய்ப்பதற்காக சென்ற நபர்கள் ஒரு பெண் சடலம் கீழே  கிடப்பதைக் கண்டு உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வாகனத்தில் இருந்த அவரது ஆவணங்களை  எடுத்து அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் ஆய்வுகூறுக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments