திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் கிளை செயலாளர் இல்லத்திற்கு நிதி உதவி

ஈரோடு  மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கரட்டுப்பாளையம் ஊராட்சி, முன்னாள் சாமக்காடு கிளை கழக செயலாளர் மு. சக்திவேல் அப்பகுதியில் சிறந்த விளங்கியவர்.

அவர் மறைந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிய நிலையில் பல்வேறு கால கட்டங்களில் திமுக விற்கு அயராது உழைத்த அவரின் குடும்பத்திற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  பிறந்த நாளில்  நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார்   பொருளுதவியும், நிதி உதவியும் செய்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ்.பழனிச்சாமி , கிளை கழக செயலாளர்கள் தம்பி (எ) பரமேஸ்வரன் , கருப்புச்சாமி , கனகராஜ் , இளைஞரணி எம்.எம்.ராஜ்குமார் , ப.இரத்தினசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments