தேனி மாவட்டம்,பெரியகுளம் வட்டம் கைலாசபட்டி அருகேமலை மேல் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில்.இங்கு மாசி மாதம் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.கைலாசநாதர் இருக்கும் நந்திகேஸ்வரருக்கும் 9 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு கட்டளைதாரர்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப்,செயலாளர் சிவக்குமார்,பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.மேலும் வருகின்ற மார்ச் 6ஆம் தேதி பௌர்ணமி தினம் என்பதால் சிறப்பு பூஜைகளும்,கிரிவலம், பொதுமக்களுக்கு அன்னதானமும்,வழங்கப்படும் என அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments