குன்றி மலைப் பகுதியில் பசுவேஸ்வரா சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே சின்ன குன்றி கிராமத்தில் பழமை வாய்ந்த பசுவேஸ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக  மாலை பெரிய குன்றி மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்று இரவு யாக பூஜைகள் நடைபெற்றது.  அதிகாலை சிறப்பு யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் கோவில் கோபுர  விமான கலசத்திற்கும், மூலவர் பசவேஸ்வர சுவாமி களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கடம்பூர் சுற்றுவட்டார கிராம மக்கள் பர்கூர் மலைப்பகுதி கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்து விழாவில் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments