விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூரை சேர்ந்த தனியார் பயிற்சி பள்ளி சார்பில் நடந்த இப் போட்டிகளில் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் என 15 பள்ளிகளில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தனிநபர் போட்டிகளும், குழு போட்டிகளும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. தனிநபர் போட்டிகளில் ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, திசை படை வீச்சு, அறுப்பு வீச்சு, அரைக்கம்பு வீச்சு, அலங்கார வரிசை மற்றும் கம்பு ஊன்றி கரணம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
குழு போட்டிகளில் ஒரு முறைக்கு 5 பேர் என களம் இறக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிநபர் பரிசுகளும், ஒட்டு மொத்த சேம்பியன் பரிசுகளும் வழங்கப்பட்டது.


0 Comments