விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ ஜெய நகரில் காங்கிரஸ் நிர்வாகியின் புதுமனை புகு விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார் அப்போது அருப்புக்கோட்டை வழியாக வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் ஐந்தாயிரம் பேர் கையெழுத்திட்ட கையெழுத்து தொகுப்பினை அருப்புக்கோட்டை நகர் காங்கிரஸ் கட்சியினர் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்
மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தையும் விருதுநகரையும் அருப்புக்கோட்டையையும் புறக்கணித்து வருகிறது அருப்புக்கோட்டையில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை வாரம் மூன்று முறை அருப்புக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டுமென அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளது.
அதேபோல பாராளுமன்றத்திலும் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன் ஆனால் எந்த பலனும் இல்லை மத்திய பாஜக அரசு அருப்புக்கோட்டை வஞ்சிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு இந்த முறை ரயில்வே மானிய கோரிக்கையில் அதை மீண்டும் வலியுறுத்துவேன் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்திற்கு ஐந்தாயிரம் பேர் கையெழுத்து இட்டுள்ளனர் அதையும் மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் வழங்குவேன் என கூறினார்.
திராணி இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அண்ணாமலை மீது அவர் செய்த குற்றத்திற்காக தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது அண்ணாமலை மீது சட்டபூர்வமான நடவடிக்கை காவல்துறை எடுக்கும் என முழு நம்பிக்கை உள்ளது என கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியினர் மக்களை அவதூறாக பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்டிவிட்டனர் அவர் டெபாசிட் இழந்து உள்ளார் எனக் கூறினார்.
தற்போது தமிழகத்தில் நிலை வரும் வட மாநிலத்தவர் பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழகத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக பாஜக ஆர்எஸ்எஸ் இணைந்து சதி வேலை செய்கிறார்கள் அவர்களோடு சேர்ந்து நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்களும் அதைத்தொடர்ந்து செய்ய விரும்புகின்றனர் அது பலிக்காது தமிழகம் வந்தாரை வாழவைக்கும் பூமி அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற முழு பொருப்பும் தமிழக அரசை சேரும் தமிழ இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வேலை தேடி வருபவர்களுக்கு பாதுகாப்பும் இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது தமிழகம் வளர்ந்த மாநிலமாக முன்னேறிக் கொண்டு வருகிறது இந்த நேரத்தில் பலரும் இங்கு வேலை தேடி வருவது வழக்கம் தமிழக இளைஞர்கள் வேலை செய்ய முடியாத வேலையை வட மாநிலத்தவர் செய்கின்றனர் என்பது நாம் அறிந்த உண்மை பாஜகவினர் பீகார் தேர்தலுக்காகவும் நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் வெற்றி பெறுவதற்காகவும் தேவையில்லாத குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் என கூறினார்.

0 Comments