நாகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் தகராறில் ஈடுபட்ட மருத்துவரின் முன்னாள் கணவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சேத்துப்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மகள் சுதா(39), சித்தா டாக்டரான இவர் தற்போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வைத்தியர் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (44). ஆயுர்வேத மருத்துவர், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு செந்தமிழ்செல்வனுக்கும், பெண் டாக்டர் சுதாவுக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 11 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்தா டாக்டர் சுதா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த மாதம் சுதா, தேவூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். 

டாக்டர் சுதா தேவூரில் பணியில் சேர்ந்த நாள் முதல் தினமும் சுதாவிடம் நேரில் சென்று செந்தமிழ் செல்வன் பிரச்சினை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மருத்துவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பணியில் இருந்தபோது அங்கு வந்த செந்தமிழ்செல்வன் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்தும். தரக்குறைவாக பேசியும், தன்னை அடித்து உதைத்தும், உடைகளை கிழித்தும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கீழ்வேளூர் போலீசில் சுதா புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தமிழ் செல்வனை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0 Comments