தாளவாடி பஸ் நிலையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து... சாலையில் சிதறிய உருளைக்கிழங்கு மூட்டைகள்...

 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த  தாளவாடி பஸ் நிலையம் அருகே உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தாளவாடியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி மேட்டுப்பாளையம் செல்வதற்காக தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. லாரியை தாளவாடியைச் சேர்ந்த டிரைவர் கார்த்தி என்பவர் ஓட்டினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் லாரியில் இருந்த கிளீனருக்கு காலில் காயம் ஏற்பட்டது. லாரி கவிழ்ந்ததால் லாரியில் ஏற்றப்பட்டிருந்த உருளைக்கிழங்கு மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. சாலையின் நடுவில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த தாளவாடி போலீசார்  விபத்து நடந்த பகுதிக்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் சிதறி கிடந்த உருளைக்கிழங்கு மூட்டைகள் அகற்றப்பட்டு கவிழ்ந்த லாரி மீட்கப்பட்ட பின் போக்குவரத்து சீரானது. இதனிடையே காயம் பட்ட கிளீனரை அப்பகுதி மக்கள் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments