தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (36). சம்பவத்தன்று வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பஸ்சை டிரைவர் பின்னால் இயக்க, செல்வம் பஸ்சின் பின்னால் நின்றபடி விசில் அடித்து அவருக்கு உதவினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை உரசுவதுபோல் பஸ் வந்தது. அதனை கண்ட வேன் டிரைவர் ஜெயசந்திரன், கண்டக்டர் செல்வத்தை திட்டினார். அவர்களுக்குள் வாய் தகராறு முற்றி ஜெயசந்திரன் செல்வத்தை தாக்கினார். இதில் காயமடைந்த செல்வம் நாகை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் ஜெயச்சந்திரனை தேடி வருகின்றனர்.

0 Comments