சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், காலம் வரை ஊதியம் வழங்குதல், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரதம் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் பேருந்து நிலையம் உள்ள அவுரித்திடலில் ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

0 Comments