டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீதி கேட்டு நெடும் பயணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

 

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு வருட காலமாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர் இதில் குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை லாபகரமான குறைஞ்சபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான நிரந்தர சட்டம் கொண்டுவரப் வேண்டும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க கூடாது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் விளை நிலங்களை விவசாயிகள் ஒப்புதல் இன்றி கைப்பற்ற வேண்டாம், சந்தைப்படுத்துதலில் இந்திய விவசாயிகள் உள்நாட்டு வணிகர்கள் சிறு குரு தொழில் முதலிட்டார்கள் உள்ளடக்கிய சந்தை உத்தரவாத சட்டத்தை கொண்டு வர வேண்டும் பருவநிலை மாற்றத்தில் இருந்து விவசாயத்தை பாதுகாக்க மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் இயற்கை நீர் வளங்களை பாதுகாத்திட ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் டெல்லியில் போராட்ட காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உரம் உணவு வேளாண் வளர்ச்சிக்கான மானியங்களை குறைக்க வேண்டாம் வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு அப்போது பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதிகளை அளித்ததன் அடிப்படையில் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் கொடுத்த ஒன்பது அம்ச வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாளை கன்னியாகுமரியில் துவங்கி மார்ச் 20 ஆம் தேதி டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் நடைபெறுகிறது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்று வருகிறது இந்த கூட்டத்தில் பஞ்சாப் ஹரியானா கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரியில் நடைபெற இருக்கும் நீதி கேட்டு நெடும் பயணம் நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து மாநில விவசாயிகளும் வாகனம் மூலமாக மன்னார்குடியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments