பெரியகுளத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து-கண்டன ஆர்ப்பாட்டம்

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  தாமரைக்குளம் கண்மாயில்  2023 ல்  மீன் பாசி குத்தகையில் ஊழல் நடைபெற்றதாகவும்  2022-ல் 24 லட்சத்திற்கு ஏலம் போனது என்றும் 2023ல் 12 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய தேனி மாவட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 2023ல் விடப்பட்ட மீன் பாசி குத்தகையை ரத்து செய்க 2023 -ல் மீன் பாசி குத்தகை 24 லட்சத்திற்கு ஏலம் எடுத்து மீன் குஞ்சுகள் விடப்பட்டும்   குஞ்சுகள்  பாதுகாத்தும் பராமரித்தும் வந்ததில்  26 லட்சமாக 50 லட்சம் செலவு செய்தும் இயற்கை சீற்றத்தாலும்   தாமரைக்குளம் மற்றும் தென்கரை பஞ்சாயத்து கழிவுநீர் கலந்து மீன்கள் இறந்தும் ஒரு மீன் கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாகவும்  அதற்கு இழப்பீடு வழங்க கோரியும்  இன்று பெரியகுளம் KSK கேண்டீன் முன்பு AITUC சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ரவி முருகன்,  மாநில பொதுச் செயலாளர் சின்னத்தம்பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஏ ஐ டி யு சி   மீனவ தொழிலாளர் சங்கத்தினர் ஏராளமான கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Post a Comment

0 Comments